காவிரி நதிநீர் விவகாரத்தை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது: அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்து

0
16

​கா​விரி விவ​காரத்தை அரசி​யல்ரீதி​யாக பார்க்​கக்​கூ​டாது என சுற்​றுலாத்​துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் கூறி​யுள்​ளார். சுற்​றுலா வளர்ச்சிக் கழகம் சார்​பில் நடத்​தப்​படும் படகு குழாம்​கள், வண்​டலூர் உயி​ரியல் பூங்கா உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சிறு உணவு​கள், தின்​பண்​டங்​கள் கிடைக்க செய்​யும் வகை​யில் “கு​யிக் பைட்​ஸ்” என்ற சிற்​றுண்டி துரித உணவகங்​கள் செயல்​பட்டு வரு​கின்றன.

இந்​த நிலை​யில் சென்னை தலை​மைச்​ செயல​கத்​தில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள், அதி​காரி​கள் மற்​றும் பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்​காக டீ, காபி, கேக் வகைகள், குளிர்​பானங்​கள் மற்​றும் ஐஸ்​கிரீம்​கள் உள்​ளிட்ட சிற்​றுண்​டிகள் விற்​பனை செய்​யும் வகை​யில் குயிக் பைட்ஸ் சிற்​றுண்டி துரித உணவகத்தை சுற்​றுலாத்​துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் திறந்து வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் சுற்​றுலா வளர்ச்​சிக்​கழக பொது மேலா​ளர் லட்​சுமி பிரியா மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். இதன் பின்​னர் நிருபர்​களிடம் அமைச்​சர் ராஜேஷ்கு​மார் பேசி​ய​தாவது: புதி​தாக திறக்​கப்​பட்​டுள்ள சிற்​றுண்​டி​யில் குறைந்த விலை​யில் உணவு​களை வழங்க திட்​ட​மிட்​டுள்​ளோம்.

கடந்த 2 வருட​மாக சுற்​றுலாத்​துறை மூல​மாக திருப்​ப​திக்கு ஆன்​மீக பயணம் செல்​வது நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. இதனை முதல்​வரிடம் எடுத்​துரைத்​துள்​ளோம்.

முதல்​வரும் ஆந்​திர அரசிடம் பேசி மீண்​டும் ஆன்​மீக சுற்​றுலாப் பயணத்​திட்​டத்தை கொண்​டுவர நடவடிக்கை எடுக்​கப்​படும் என உறு​தி​யளித்​துள்​ளார். காவிரி விவ​காரத்​தில் தமிழக காங்​கிரஸ் தமிழக மக்​களுக்கு ஆதர​வாக இருக்​கிறது.

அதன் காரண​மாகத்தான் சட்​டப்​பேர​வை​யில் கொண்​டு​வரப்​பட்ட தீர்​மானத்​துக்​கும் ஆதரவை அளித்​தோம். காவிரி விவ​காரத்தை அரசி​யல் ரீதி​யாக பார்க்​கக்​கூ​டாது. அப்​படிப் பார்த்​தால் தமிழகம் பாலை​வன​மாக மாறி​விடும். மேகே​தாட்​டு​வில் அணை கட்ட விட​மாட்​டோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here