குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா
களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள், நாகரூட்டுபூஜை, சமூக பொங்காலை, பூப்படை போன்ற பல சிறப்பு பூஜைகள் நடந்தன. நள்ளிரவில்...
குமரியில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக நடைபெற்ற போதிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு காரணம் வெயில் மற்றும் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள்...
குளச்சல்: வாக்காளர்களுக்காக பதுக்கிய 231 மது பாட்டில்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி, வாக்காளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில்...
பேச்சிப்பாறை: படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து வாக்களித்து வந்தனர். வாக்காளர்களின் வசதிக்காக இந்த தேர்தலில் 3 இலவச படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த...
மார்த்தாண்டம்: கட்டிடத்தில் இருந்து விழுந்த பெயிண்டர் சாவு
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் (59) என்பவர் கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மனுக்கு பத்தாம் உதய பொங்கல்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் 10ம் நாள் பத்தாம் உதய பொங்கல் விழா நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் கோவில் தந்திரி ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பில் தீ மூட்டி விழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தமிழகம்...
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 2.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதில் குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி...
குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, உடன் வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்....
அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்
அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
விளவங்கோடு: காங். மீது பாஜக தேர்தல் அதிகாரியிடம் புகார்
விளவங்கோடு தொகுதியில் தேர்தல் நாளான நாளை கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ரவுடிகளை இறக்கி, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கலவரத்தை தூண்டி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் சஜி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியிடம் நேற்று புகார் அளித்தார். தேவிகோடு, பளுகல், மலையடி, வன்னியூர்,...













