கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் போராட்டம்!
நாகர்கோயில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில். கன்னியாகுமாரி மாவட்ட அனைத்து பேரூராட்சி தலைவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது வருகிறது.
மக்கள் தேவைகளை உடனே பூர்த்தி செய்ய முடியாத வகையில் அரசு செயல்படுவதாகவும், மின்விளக்கு பழுது ஏற்பட்டால் உடனே சரி செய்ய பஞ்சாயத்துற்கு அதிகாரம் இல்லை என்பதை கண்டித்து...
கன்னியாகுமரி குலசேகரம் – அருமனை பகுதியில் அதிகரிக்கும் ரவுடிகள் நடமாட்டம்?
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அருமனை பகுதிகளில், இரவு நேரங்களில் சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பயத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின்...
குமரி மாவட்டத்தில் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,401 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிப் பேசியதாவது:
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை...
கன்னியாகுமரி இரணியல் அருகே பெண் சந்தேக மரணம்
திங்கள் நகா் அருகே பெண் உயிரிழந்தது தொடா்பாக இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
மேக்கா மண்டபம் அருகே உள்ள கடமலைக் குன்று பகுதியைச் சோ்ந்த சுந்தரதாஸ் மனைவி தங்க லீலா (67). இவருக்கு திருமணமான ஒரு மகன், மகள் உள்ளனா். சுந்தரதாஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு...
நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளையடித்த நபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுமிதா வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட 1கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்,வைர நகைகள், பணம் மீட்பு- கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி(30) மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்களான முருகன்,முருகேசன் ஆகிய...
குமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை கடலில் மாயமான 4 வயது சிறுமி சடலமாக மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறை கடற்கரையில் குடும்பத்துடன் இருந்த இரு குழந்தைகளை கடல் அலை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் ஒரு குழந்தையை மீட்டனர். மாயமான 4 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், மாயமான 4 வயது சிறுமி...
கன்னியாகுமரியில் தாய் மாமன் சீர் திட்டம் தொடங்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர்
தமிழக அரசின் தாய்மாமன் சீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் IAS தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட குழந்தை மாயம்
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறை கடற்கரையில் குடும்பத்துடன் இருந்த இரு குழந்தைகளை கடல் அலை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் ஒரு குழந்தையை மீட்டனர். மாயமான 4 வயது குழந்தையைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் அப்பகுதி மீனவர்களும் இணைந்து தேடி வருகின்றனர். இன்று கடல் அலைகள் அதிகமாக இருக்கும்...
தக்கலை அருகே வில்லுக்குறியில் மருந்தக ஊழியா் தற்கொலை
தக்கலை அருகே வில்லுக்குறியில் மருந்தக (மெடிக்கல் ஸ்டோா்) ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லுக்குறி, மணக்கரை, பரப்புவிளையைச் சோ்ந்த ஜெய்சன் (32), வில்லுக்குறி பகுதியில் உள்ள மருந்தகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கும் பத்மசாந்தி (30) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா்.
ஜெய்சனின்...
தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மின்கம்பத்தில் ஏறி தெரு விளக்கைப் பராமரித்த தூய்மைப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மருதூா்குறிச்சி, நெல்லிக்காய்விளையைச் சோ்ந்தவா் இயேசுராஜன் (48). மருதூா்குறிச்சி ஊராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
இவா் சனிக்கிழமை ஊராட்சி பகுதியில் உள்ள...











