கன்னியாகுமரி கிராம பட்டாதாரர்கள் 9(2) அறிக்கையைப் பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு

0
57

கன்னியாகுமரி கிராம பட்டாதாரர்கள் 9(2) அறிக்கையைப் பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு. கன்னியாகுமரி கிராமத்தில் DGPS கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நவீன மறுநில அளவைப் பணி முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 9(2) அறிக்கை சார்வு செய்யும் பணி ஜூலை 6 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி கிராமத்திற்குட்பட்ட பட்டாதாரர்களில் 9(2) அறிக்கை கிடைக்காதவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மறுநில அளவை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றுக்கொள்ளலாம். அறிக்கையில் பிழை இருப்பின், அதைப் பெற்ற 30 நாட்களுக்குள் ஆய்வாளர், மறுநில அளவை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலக முதல் மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில் என்ற முகவரியில் மனு அளிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here