குமரியில் இருந்து கனிம வளம் கடத்தல் 2 டெம்போக்கள் பறிமுதல்; 2 பேர் கைது

0
72

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி வழியாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து களியக்காவிளை சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

அப்போது தார்ப்பாய் மூலம் மூடப்பட்டு, சிமெண்ட் லோடு ஏற்றி செல்வது போல் வந்த லாரியை போலீசார் நிறுத்தினர். டிரைவர் தப்பி ஓட முயற்சி செய்ததும், சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து லாரியை சோதனை செய்தபோது அதில் கனிம வளம் இருந்ததும், அவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர் சிதறால் பகுதியை சேர்ந்த சிபின் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.

இது போன்று மலைபடி பகுதியில் போலீசார் இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றனர். இதை அடுத்து 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி பாறைமடை என்ற பகுதியில் வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

போலீசார் வெள்ளறடை பகுதியை சேர்ந்த அகஸ்டினை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here