Google search engine

குமரியில்: 2 நாட்களில் ரூ. 12. 25 கோடிக்கு மதுபான விற்பனை

குமரி மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில், 77 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறும். சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

குமரி: வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி பார்வையாளர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு...

குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்

குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள் சரியாகப் பணிகளைச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில்...

குமரி: தமிழக ஆயர் பேரவை பேரில் போலி நோட்டீஸ் – கைது

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் தலைமையில் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவட்டார் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள், துண்டு பிரசுரம் விநியோகித்த...

சாஸ்தாங்குளம்: சமய வகுப்பிற்கு முதல் பரிசு

வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீடம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வித்யா ஜோதி பட்டத்துக்கான பண்பாட்டு போட்டிகளில், விளவங்கோடு மற்றும் மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு நாடகப் போட்டியில் சாஸ்தாங்குளம் சமய வகுப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த வெற்றியைப் பெற்ற மாணவர்களை சமய வகுப்பு...

நித்திரவிளை: பறக்கும் படை சோதனை.. ரூ 3. 24 லட்சம் சிக்கியது

கிள்ளியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி மற்றும் குழுவினர் நேற்று இரவு 7:30 மணிக்கு நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம் இருந்து ரூ. 3.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நில புரோக்கர் எனத்...

தக்கலையில்: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட நிமிர் குழு

தக்கலை அருகே 12 ஆண்டுகளாக சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முதியவரை குமரி மாவட்ட போலீஸ் நிமிர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். முதல் கட்ட பராமரிப்புகளை செய்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் மேல்பாலை காருண்யா மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். மாவட்ட போலீஸ்...

குமரியில்: நூதன முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நவதானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவைகளைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் தேர்தல் பார்வையாளர் சுபாஸ்ரீநந்தா ஆகியோர்...

குளச்சல்: முதியவர் சாவு – போலீசார் விசாரணை

குளச்சல் பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த முதியவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் புண் காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று (ஏப்ரல் 17) அவர் உயிரிழந்தார். குளச்சல் போலீசார் அவரது உடலை மீட்டு பிணவறையில் வைத்துள்ளனர்....

களிக்காவிளை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

மடிச்சல் பகுதியைச் சேர்ந்த சத்தியதாஸ் (57) என்ற விவசாயி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று சந்தவிளையில் உள்ள அவரது தென்னந்தோப்பில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் கண்டறிந்தனர். அவர் அருகே விஷ பாட்டில் கிடந்ததால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்...