சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

0
17

கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 2.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதில் குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here