கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் 10ம் நாள் பத்தாம் உதய பொங்கல் விழா நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் கோவில் தந்திரி ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பில் தீ மூட்டி விழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கல் வழிபாடு செய்தனர்.














