இரணியல் அருகே பெண்ணை மிரட்டியதாக பள்ளி தோழன் கைது

குமரியில் தோழியுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது

இரணியல் அருகே கணவரை பிரிந்து வாழும் 28 வயது பெண்ணுடன் பழகி வந்த பள்ளி தோழன், அவருடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் பழகி வந்த பள்ளி தோழன் அபிஷேக் என்பவர், தனிமையில்...
நாகர்கோவில் அருகே வசிக்கும் யூடியூபர் மதுமிதா மீது 5 பவுன் தங்கச் செயின் திருட்டு புகார்; போலீசார் தேடல்

நாகர்கோவில் பிரபல யூடியூபர் மதுமிதா தலைமறைவு

நாகர்கோவில் அருகே வசிக்கும் பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 2022-ல் திருநெல்வேலியில் ஒருவரிடம் மசாஜ் செய்வது போல் நடித்து 5 பவுன் தங்கச் செயினை திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலிக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் மதுமிதா வெளியூர் சென்றதாக கூறப்பட்ட நிலையில் வீடு திரும்பாததால்,...
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம்

நாகர்கோவில் வடசேரியில் சாலையில் ஓடும் கழிவுநீர் – பொதுமக்கள் அவதி

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் சுமார் இரண்டு மூன்று நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரானது வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அதிகம் அந்தப் பகுதியை கடந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்படும்...
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 4 கடைகளை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கரநாராயணன், க. சக்திமுருகன், ரவி, பிரவீன்...
கருங்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா கருங்கல்லில் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை...
அருமனை பேரூராட்சி தலைவி கட்சி மாறிய விவகாரத்தில் இரு தரப்பினரிடையே தகராறு

அருமனையில் மாா்க்சிஸ்ட், தவெக கட்சியினரிடையே தகராறு

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சித் தலைவா் கட்சி மாறிய நிலையில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது. அருமனை பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா் லதிகாமேரி. இவா் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இருப்பினும் பேரூராட்சி தலைவராக...
குழித்துறையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

களியக்காவிளையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக கோரி தில்லியில் காங்கிரஸ் கட்சியினா் நடத்திய போராட்டத்தின்போது, ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குழித்துறையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினா் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன்...
அருமனை அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் சாலையோர சானலில் கவிழ்ந்து விபத்து

குமரி மாவட்டம் அருமனை அருகே, ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக கூறப்படும் கார் சானலில் கவிழ்ந்து விபத்து!

குமரி மாவட்டம் அருமனை அருகே, ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக கூறப்படும் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சானலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அதிகாரிகள்...
குமரி மாவட்டத்தில் வெப்பச் சலனம் காரணமாக மலையோரப் பகுதிகளில் இடியுடன் மழை

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக, தற்போது பல்வேறு மலையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குலசேகரம், திருவரம்பு, தும்பகோடு, பொன்மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் குளிர்ச்சியான வானிலை நிலவி...
நாகர்கோவில் சுங்கான்கடையில் Pink Trumpet மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாகர்கோவில் மாநகரில் பசுமையை அதிகரிக்க Pink Trumpet மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

நகர பசுமையாக்கும் (Urban Greening) திட்டத்தின் கீழ், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் மாநகராட்சி சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயிலான சுங்கான்கடை பகுதியில் சாலையோரங்களில்...