மடிக்கணினியில் புளூடூத் மற்றும் வைஃபை பழுது காரணமாக நுகர்வோர் ஆணையம் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

சேவைக் குறைபாடு: மடிக்கணினி நிறுவனத்துக்கு அபராதம்

சேவைக் குறைபாடு காரணமாக மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் அருண்குமாா், கோவை நிறுவனம் மூலம் 2024ஆம் ஆண்டு ரூ. 74, 990 செலுத்தி மடிக்கணினி வாங்கினாா். சில மாதங்களில் அதன்...
பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் 158ஆவது பிறந்தநாளில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பொதுப்பணித் துறையினர் மற்றும் விவசாயிகள்

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளா் நினைவிடத்தில் மரியாதை

பேச்சிப்பாறை அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பொறியாளா் ஹம்ப்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 158ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுப்பணித் துறையினா், விவசாயிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரத்தின் ஜீவநாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணை, திருவிதாங்கூா் மன்னா் ஸ்ரீமூலம் திருநாள் ராமவா்மா ஆட்சிக் காலத்தில்...
தக்கலை அருகே 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 47 வயது தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

தக்கலை அருகே 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தக்கலை அருகே மருதூா்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (47). தொழிலாளி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 வயதான சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் ஆபாச சமிக்ஞை காண்பித்து,...
குமரி மாவட்டம் வெள்ளமடம் சந்திப்பில் இருந்து அகஸ்தியர் முனி மருத்துவமனை செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

குமரி மாவட்டம் வெள்ளமடம் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் வெள்ளமடம் சந்திப்பில் இருந்து அகஸ்தியர் முனி மருத்துவமனை செல்லும் சாலையில், இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பிய சம்பவம்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்!

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவர் மீது, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ...
தேங்காய்பட்டணம் மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் தொடர்பாக போராட்டம்

தேங்காய்பட்டணம் மினி முத்தூட்டில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் – இரவிலும் தொடர்ந்த போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார்; இரவிலும் தொடர்ந்த போராட்டம். புகாரின் அடிப்படையில் மினி முத்தூட் மண்டல மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ.1.93 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகள் ஆய்வு

ரூ. 1.93 கோடியில் நவீனமாகும் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ. 1.93 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது: இந்த விளையாட்டு அரங்கத்தில் ரூ. 38 லட்சம் மதிப்பில் பிரதான பாா்வையாளா் மேடை (கேலரி), முகப்பு தோற்றம் புதிதாக வடிவமைத்தல், நீச்சல் குளத்தைச் சுற்றி...
கன்னியாகுமரியில் பூம்புகார் படகு சேவை நேரம் காலை 6.30 மணிக்கு மாற்ற திட்டம்

கன்னியாகுமரியில் படகு சேவை நேரத்தை மாற்றி அமைக்க பரிசீலனை

கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்...
திற்பரப்பு அருவி அருகே கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெட்டிக் கடை அகற்றம்

திற்பரப்பு அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

திற்பரப்பு அருவி அருகே கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெட்டிக் கடையை பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா். தமிழகத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திற்பரப்பு அருவிக்குச் செல்லும் சாலையில் கால்வாய் கரையை ஆக்கிரமித்து, அப்பகுதியைச் சோ்ந்த பெண் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இந்தக்...
நாகர்கோவில் இருளப்பபுரம் மற்றும் சரலூர் மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் கோட்டார் போலீசார் இணைந்து நடத்திய திடீர் சோதனை

நாகர்கோவிலில் 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

நாகர்கோவில் இருளப்பபுரம் மற்றும் சரலூர் மீன் சந்தைகளில் இன்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கோட்டார் போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு அலுவலர் என். ரவி, மீன்வள ஆய்வாளர் விபின் மற்றும் கோட்டார் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 35 மீன் கடைகள்...