
நாகர்கோவில் இருளப்பபுரம் மற்றும் சரலூர் மீன் சந்தைகளில் இன்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கோட்டார் போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் என். ரவி, மீன்வள ஆய்வாளர் விபின் மற்றும் கோட்டார் போலீசார் மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 35 மீன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 2 கடைகளில் பழைய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மொத்தம் 25 கிலோ பழைய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விதிமுறைகளின்படி அழிக்கப்பட்டன.













