திற்பரப்பு அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

0
7
திற்பரப்பு அருவி அருகே கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெட்டிக் கடை அகற்றம்
திற்பரப்பு அருவிக்குச் செல்லும் சாலையில் கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெட்டிக் கடையை நீர்வளத்துறையினர் அகற்றினர்.

திற்பரப்பு அருவி அருகே கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெட்டிக் கடையை பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

தமிழகத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திற்பரப்பு அருவிக்குச் செல்லும் சாலையில் கால்வாய் கரையை ஆக்கிரமித்து, அப்பகுதியைச் சோ்ந்த பெண் பெட்டிக் கடை நடத்தி வந்தாா்.

இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று நீா்வளத் துறையினருக்கு புகாா் வந்த நிலையில், திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவள்ளி முன்னிலையில், நீா்வளத் துறையினா் கடையை இடித்து அகற்றினா்.

உரிய முன்னறிவிப்பு இன்றி திடீரென கடையை அகற்றியதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடையை நடத்தி வந்த பெண் குற்றஞ்சாட்டினாா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here