
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு,மணியன்குழி பள்ளிவாசலில் காவல்துறை பிரச்சாரம்!
குமரி மாவட்டம் மணியன்குழி பள்ளிவாசலில் தக்கலை டிஎஸ்பி காந்தி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருக்கவும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.













