கல்லூரி மாணவி கடத்தல்: இளைஞா் போக்ஸோவில் கைது

0
33
தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவியை அழைத்துச் சென்றதாக இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
தக்கலை அருகே காணாமல் போன பொறியியல் கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர். இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தக்கலை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த மாணவி கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். அண்மையில் தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவியை கடந்த 9-ஆம் தேதி அவரது பெற்றோா் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், மாணவி கல்லூரிக்குச் செல்லவில்லையாம். அவா் குறித்த எந்த தகவலும் பெற்றோருக்கு தெரியவில்லை, அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோா் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சோ்ந்த அஜ்மல் (22) என்ற இளைஞா் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து மாணவியை மீட்ட போலீஸாா் அஜ்மலை புதன்கிழமை கைது செய்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here