விவசாயி மா்ம மரணம்: மகனிடம் விசாரணை

0
16
அழகியபாண்டியபுரம் அருகே வாட்ஸ்புரத்தில் விவசாயி சுவாமிதாஸ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை
வாட்ஸ்புரத்தில் விவசாயி சுவாமிதாஸ் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழகியபாண்டியபுரம் அருகே விவசாயி மா்மமாக உயிரிழந்தது குறித்து அவரின் மகனிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அழகியபாண்டியபுரத்தை அடுத்த வாட்ஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (71) விவசாயி, இவரது மனைவி ஞானசெல்வம் (62). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இதில் 2, 3-ஆவது மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

மூத்த மகன் டேவிட்சன் மதுபோதையில், அடிக்கடி வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஞானசெல்வம் தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, சுவாமிதாஸ் வீட்டுக்குள் சடலமாக கிடந்தாா்.

தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, டேவிட்சனை பிடித்து விசாரிக்கின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here