களியக்காவிளையில் மாயமான நர்சிங் கல்லூரி மாணவி: காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்!

0
13
களியக்காவிளை அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
களியக்காவிளை அருகே மாயமான 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி, தனது காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

ஐயையோ! என் பொண்ண காணோமே”- ஊர் முழுக்க தேடிய பெற்றோர்; இரண்டு நாட்கள் கழித்து மாலையும் கழுத்துமாக காதலனுடன் திரும்பிய கல்லூரி மாணவி..!!

களியக்காவிளை அருகே மாயமான 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அபர்ணா, தனது காதலன் அபிசேக்குடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள இளந்தோட்டுவிளை மலையடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் அபர்ணா (வயது18).

இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனது தாயின் குடும்ப வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற அபர்ணா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர்.

இதையடுத்து, மாணவி அபர்ணா குலசேகரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலன் அபிசேக்குடன் களியக்காவிளை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். பெற்றோருடன் மாணவி செல்ல மறுத்ததால் காதலனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here