
திருப்பரப்பு தனியார் லாட்ஜில் பரபரப்பு – மருத்துவரைக் கட்டிப்போட்டு 12 சவரன் நகை கொள்ளை! 9 பேர் கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்கள், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என கூறி மருத்துவரை வரவழைத்துள்ளனர்.
பின்னர் அவரை கட்டிப்போட்டு அவர் அணிந்திருந்த 12 சவரன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், உரிய ஆதார் ஆவணங்கள் எதுவும் பெறாமல் லாட்ஜ் நிர்வாகம் அறை ஒதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இரவு நேரத்தில் மருத்துவர் எதற்காக அந்த லாட்ஜுக்கு சென்றார், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













