ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோற்றதால் பொருத்திய தெருவிளக்குகளை அகற்றிய வேட்பாளர்

0
9

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் மனைவி தோல்வி அடைந்த விரக்தியில் அவரது கணவர் பொருத்திய தெருவிளக்குகளை அகற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா சர்மா தோல்வியடைந்ததார். இதையடுத்து, அவரது கணவரும், உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ-வின் தனி உதவியாளருமான அலோக் சர்மா, வாக்களிக்காத மக்களைப் பழிவாங்கும் விதமாகத் தாங்கள் பொருத்திய விளக்குகளைக் கழற்றிச் செல்வதாக கிராம மக்கள் கூறினர். ஆனால், சட்டவிரோத மின் விளக்குகள் அகற்றப்பட்டதாக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

ஜெய்ப்பூர் மின் விநியோகக் கழகத்தின் செயற்பொறியாளர் மீனா கூறும்போது, “மின் பழுதுகளை சரிசெய்யச் சென்ற எங்களது ஊழியர்கள், மின்கம்பங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக தெருவிளக்குகள் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அந்த விளக்குகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்.எல்.ஏ. ராம்சஹாய் வர்மா, “தீபாவளிப் பண்டிகையையொட்டி வேட்பாளர்களால் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டன. இதற்கும் தேர்தல் தோல்விக்கும் தொடர்பு் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here