‘இந்தியாவின் பன்முகத்தன்மையை பார்த்து வியக்கிறேன்’ – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

0
21

இந்​தி​யாவின் பன்​முகத்​தன்​மையைப் பார்த்து வியக்​கிறேன் என்று ரஷ்ய அதிபர் தெரி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உலக நாகரி​கங்​களில் இந்​திய நாகரி​கமே மிகவும் பழமையானது. இந்​தி​யாவின் வரலாறை படிக்​கும்​போது மிகுந்த வியப்பு அளிக்​கிறது. அண்​மையில் பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​த​போது இந்​திய மக்​களில் எத்​தனை பேர் பிரதான மொழியை பேசுகின்​றனர் என்று கேள்வி எழுப்​பினேன்.

அப்​போது அவர், மூன்​றில் ஒரு பகுதி மக்​கள் மட்​டுமே; இதர இரு பங்கு மக்​கள் அவரவர் தாய்​மொழியைப் பேசுகின்​றனர் என்றார். சுமார் 150 கோடி இந்​தி​யர்​களில் 60 கோடி பேர் மட்​டுமே பிரதான மொழியை பேசுகின்​றனர். இது எனக்கு மிகவும் ஆச்​சரிய​மாக இருக்​கிறது. இந்​தி​யாவின் பன்​முகத்​தன்​மையைப் பார்த்து வியக்​கிறேன்.

ரஷ்யாவில் பழங்​கால கிறிஸ்தவம், புத்த மதம், யூத மதம், முஸ்​லிம் மதங்​களைச் சேர்ந்த மக்​கள் ஒற்​றுமையாக வசிக்​கின்​றனர். தற்​போது சுயநலம் கொண்ட தலை​வர்​கள் உக்​ரைனை ஆள்​கின்​றனர். ரஷ்யா​வும் உக்​ரைனும் ஒன்​றாக நிற்க வேண்​டும். உக்​ரைன் ராணுவ வீரர்​கள் சரண் அடைய அவ​சி​யமில்லை. ரஷ்யாவின் பக்​கம் நிற்க வேண்​டும். இவ்​வாறு அதிபர் புதின் தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here