ஓமன் கடலில் மாயமான குமரி மீனவர்: மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு!

0
20
ஓமன் கடலில் மாயமான கீழமணக்குடி மீனவர் ஏசுதாசனை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு
ஓமன் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான கீழமணக்குடியைச் சேர்ந்த மீனவர் ஏசுதாசனை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஓமன் கடலில் மாயமான குமரி மீனவர் – மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் கோரிக்கை

குமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏசுதாசன் என்பவர், ஓமன் நாட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதாகக் கூறப்படுகிறது.

மாயமான ஏசுதாசனை மீட்டுத் தருவதற்கு ஓமன் நாட்டு அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here