‘பாக்கெட் நாவல்’ குழுவினரை அறிமுகப்படுத்திய மாளவிகா மோகனன்

0
18

தியாக​ராஜன் குமாரராஜா இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நாயக​னாகவும் மாளவிகா மோக​னன் நாயகி​யாகவும் நடித்​துள்ள படம், ‘பாக்​கெட் நாவல்’. இவர்​களு​டன் கன்​னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். பொங்​கலை முன்​னிட்டு ஜன. 14-ல், தமிழ், தெலுங்கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் இப்​படம் வெளியாக இருக்​கிறது.

இப்​படத்​துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்​கிறார். இதன் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் இப்​படத்​தின் திரைக்​குப் பின்​னால் பணி​யாற்​றும் கலைஞர்​களை வெளிச்​சத்​துக்கு கொண்டு வரும் வித​மாக, புதிய வீடியோவை நடிகை மாளவிகா மோக​னன் வெளி​யிட்​டுள்​ளார். தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள இந்த வீடியோவில், கேம​ரா​வுக்கு முன்​னால் தோன்​றாத, ஆனால் படத்​தின் உரு​வாக்​கத்​துக்கு பங்​களித்​துள்ள தொழில்​நுட்​பக் கலைஞர்​கள், படப்​பி​டிப்​புக் குழு உறுப்​பினர்​கள் மற்​றும் இதர பணி​யாளர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here