‘பாஸ்வேர்ட்’ படத்தை இயக்கிய கண்ணன் அடுத்து இயக்கியுள்ள திரைப்படம், ‘ஸ்க்ரோல்’. அரவிந்த் சுந்தர், காவ்யா அனில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேகா ராஜன், முருகன் கோவிந்தசாமி, சிபி, பொற்கொடி, சுரேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் ஆகியோர் இசை அமைத்து உள்ளனர்.
இதன் கதை முழுவதும் நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லப்படும் வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது.
கே 16 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம், கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவ. 28 வரை நடைபெறும் இப்பட விழாவில் வேர்ல்டு பிரீமியர் ஆக இப்படம் திரையிடப்படுகிறது. அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.











