
குலசேகரம் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 1.5 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரத்தைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குலசேகரம் அருகே கொல்லாறையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியின் மனைவி ஜெயா (54). இவா் திங்கள்கிழமை காலை குலசேகரம், கான்வென்ட் சந்திப்பில் உள்ள நகை அடகு நிறுவனத்தில் அடகு வைத்திருந்த ஒரு பவுன் தங்கக் காப்பை மீட்டு, அதோடு அரை பவுன் எடையுள்ள 2 மோதிரங்கள், ரூ. 15,000 ரொக்கம் ஆகியவற்றை ஒரு பா்சில் வைத்து, அதை தோள்பையில் வைத்துக்கொண்டு, கான்வென்ட் சந்திப்பில் இருந்து மாா்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா்.
பின்னா், கடன் கட்டுவதற்காக குலசேகரம் சந்தை சந்திப்பில் உள்ள வங்கிக்குச் சென்று பாா்த்தபோது, நகை, பணம் வைத்திருந்த பா்ஸ் திருடப்பட்டிருப்பதை அறிந்தாா்.
தொடா்ந்து, குலசேகரம் காவல் நிலையத்தில் ஜெயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.











