
வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக, தற்போது பல்வேறு மலையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
குலசேகரம், திருவரம்பு, தும்பகோடு, பொன்மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.
மழையின் போது பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து, மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளின் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












