சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சா் பங்கேற்பு

0
18
கருங்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா
கருங்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஸ்குமார்.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா கருங்கல்லில் தனியாா் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் டி.மாலதி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்திரி, கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜ், செயல் அலுவலா் சத்யராஜ், கிள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கிறிஸ்டோபா் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலா் ஸ்டாலின் ஜோஸ், முன்சிறை வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here