பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தமிழக பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு தலைவர் ராமன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அக்னி வீர் திட்டத்தில் 17 வயதில்ராணுவத்தில் சேருபவர்கள் 21 வயது வரை 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். 5 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றினால், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நாட்டில்பல்வேறு சலுகைகள் உள்ளன.
இதுபோன்ற சலுகைகளை...
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 10-ம் தேதி நடத்தை விதிகள்...
ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் அவர்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் இதுவரை 8.74...
‘புதுமைப்பெண்’ திட்டத்தில் ரூ.1,000 பெற அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு
admin - 0
புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளும் மாதம் ரூ.1,000 பெற கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெண் கல்வியை போற்றும் விதமாகவும், மாணவிகள் உயர்கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின்தொடங்கி வைத்த ‘புதுமைப்பெண்’திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல்...
டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தைக் கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனங்கள் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இங்கு டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகுண்டும், குழியுமாக உள்ளது.மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் மாற்று வழியில் லாரிகளை இயக்கிசென்றால் அதிக கிலோ...
தமிழகம் முழுவதும் போதை பொருள் வழக்குகளில் குறிப்பிட்ட வழக்கறிஞர் ஆஜராகும் மர்மம்: காவலர்களை மாற்ற டிஜிபிக்கு ஐகோர்ட் பரிந்துரை
admin - 0
கேரள மாநிலம், வெல்மான் எடவட்டத்தைச் சேர்ந்தவர் டோனி என்ற ஆண்டோ வர்கீஸ். கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவர், 15 மாதங்களாக சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது, வழக்கறிஞர், மனுதாரர் கையெழுத்து இல்லாமல் இருந்த மனுவைஏற்றதற்கும், வழக்கறிஞர் கையெழுத்திட்ட வக்காலத்தை திரும்ப வழங்கியதற்கும், உயர்...
பேருந்து – ரயில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: செயலியை உருவாக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்
admin - 0
சென்னையில் அரசு பேருந்துகள்,புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோரயில்களில் லட்சக்கணக்கான வர்கள் தினசரி பயணிக்கின்றனர். ஆனால், தனித்தனியான முறைகளில் இவற்றுக்கான பயணச்சீட்டுகளை பெற வேண்டியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) தனது முக்கியமான முயற்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே புறநகர் ரயில் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை...
தென் மத்திய ரயில்வேயில் விஜயவாடா யார்டில் பொறியியல் பணி காரணமாக 8 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் விவரம்:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.4முதல் ஆக.11 வரை அதிகாலை 4.55மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (17237), மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டாவுக்கு ஆக.4 முதல் ஆக.11 வரைமாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (17238) ஆகிய 2 ரயில்கள்...
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்சி, மனித உரிமை ஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் வி.பி.துரைசாமி தலைமையிலான குழுவினர் தேசிய பட்டியலின...
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள...










