பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தமிழக பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு தலைவர் ராமன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அக்னி வீர் திட்டத்தில் 17 வயதில்ராணுவத்தில் சேருபவர்கள் 21 வயது வரை 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். 5 ஆண்டுகள் அவர்கள் பணியாற்றினால், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நாட்டில்பல்வேறு சலுகைகள் உள்ளன.
இதுபோன்ற சலுகைகளை 5 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு,வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வழங்கினால் அதிக நிதி செலவுகள் தான் ஏற்படும். அந்த நிதி செலவை குறைக்கத்தான் 4 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ராணுவத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடிதான் நிதி ஒதுக்கினார். ஆனால், இப்போது நிர்மலா சீதாராமன் ரூ.6.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.
அக்னி வீர் திட்டத்தின் பல்வேறுசிறப்புகளை ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் தெரிந்து கொள்ள மாட்டார்கள். எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பது, குறை சொல்வதுதான் இவர்களது நோக்கம். ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட திட்டங்களைபோல, அக்னி வீர்திட்டத்தையும் கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான்.
ஆனால், சுயநலத்துக்காக அவர்கள் எதையும் செயல்படுத்தவில்லை. ராணுவத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது காங்கிரஸ் கட்சி. அதனால், இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.