சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.
அதன்படி, சென்னையில் இன்று (17-ம் தேதி) அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
நாளை (18-ம் தேதி), தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலும், 19-ம் தேதி அவிநாசி, கோவை தெற்கிலும், 20-ம் தேதி திருச்சி கிழக்கு, ரங்கம், லால்குடி ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.














