ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் பி.விஸ்வநாதன் பெருமிதம்

0
21

தமிழ்​நாடு மாநில அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப கவுன்​சில் மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகம் சார்​பில் தமிழ்​நாடு தொழில்​நுட்ப பரிமாற்ற மாநாடு சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த மாநாட்டை உயர்​கல்​வித் துறை அமைச்​சர் பி.விஸ்வநாதன் தொடங்கி​வைத்து பேசிய​தாவது: உயர்​கல்​வித் துறை செயலரின் ஆலோ​சனையை ஏற்று இந்த மாநாடு இனிமேல் ஆண்​டுதோறும் நடத்​தப்​படும்.

சென்​னை​யில் மட்​டுமின்றி மதுரை, கோவை, சேலம் உள்​ளிட்ட நகரங்​களி​லும் நடத்​து​வோம். மத்​திய அரசின் நிதி ஆயோக் வெளி​யிட்ட ஆய்​வறிக்​கை​யின்​படி, தமிழகம் 16,046 காப்​புரிமை விண்​ணப்​பங்​களை சமர்ப்​பித்​தும், 44,611 ஆய்வுக் கட்​டுரைகள் வெளி​யிட்​டும் முதலிடத்தை பிடித்​துள்​ளது.

புதிய கண்​டு​பி​டிப்​பு​கள் உற்​பத்தி நிலையை எட்டி மக்​களைச் சென்​றடைய, காப்​புரிமை பெறு​வது அவ​சி​யம். அதற்கு மாநில அறி​வியல் ஆராய்ச்சி கவுன்​சில் பல வழிகளில் உதவு​கிறது. இவ்​வாறு அவர் பேசினார்.

உயர்​கல்​வித் துறை செயலர் தீரஜ்குமார் பேசும்​போது, “தொழில்​நுட்ப மேம்​பாடு முக்​கிய​மானது. அதேநேரம், தொழில்​நுட்​பங்​கள் வணிக ரீதி​யில் உற்​பத்தி நிலையை அடைவதும் முக்​கிய​மானது. சீனாவில் 80 முதல் 90 சதவீத தொழில்​நுட்​பங்​கள் உற்​பத்தி நிலையை அடைந்து விடு​கின்​றன” என்​றார்.

தமிழகத்​தில் புவிசார் குறியீடு (ஜி.ஐ) பெற்ற பொருட்​களின் விவரங்​கள் அடங்​கிய நூலை அமைச்​சர் விஸ்வநாதன் வெளி​யிட்​டார். அவரது முன்​னிலை​யில் பல்​வேறு நிறு​வனங்​களு​டன் 10 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

முன்​னதாக, தமிழ்​நாடு மாநில அறி​வியல் தொழில்​நுட்ப கவுன்​சில் உறுப்​பினர்-செயலர் எஸ்.வின்​சென்ட் வரவேற்று பேசும்​போது, “கண்​டு​பி​டிப்​பாளர்​கள் தங்​கள் தொழில்​நுட்​பங்​களுக்கு காப்​புரிமை பெற தொழில்​நுட்ப கவுன்​சில் அனைத்து உதவி​களை​யும் செய்து வரு​கிறது.

97 தொழில்​நுட்​பங்​கள் உற்​பத்தி நிலைக்கு தயார்​நிலை​யில் உள்​ளன” என்​றார். கவுன்​சில் அறி​வியல் அலு​வலர் அ.ரமணன், அண்ணா பல்​கலைக்​கழக பதிவாளர் வி.குமரேசன் மற்​றும் பேராசி​ரியர்​கள், மாணவர்​கள், தொழில் துறை​யினர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அமைச்​சர் விஸ்வநாதன், “பல்​கலைக்​கழகங்​களில் தற்​காலிக ஏற்​பாடாக பொறுப்பு துணைவேந்​தர்​களை நியமிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. நிரந்​தர துணைவேந்​தர் நியமனம் குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்’’ என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here