சென்னை: விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ்சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே,ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். படித்த காலத்தில் இருந்தேஆர்எஸ்எஸ் தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில்...
பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகள போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்...
சென்னை: தீபாவளி தினத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அக்.31-ம் தேதி தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டை போலவே இந்த...
தமிழகத்தில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகளை அடுத்த மார்ச்சுக்குள் வழங்க அனுமதி
admin - 0
சென்னை: கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் விநியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம்...
சென்னை: டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் இன்று (அக்.21) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை மெரினா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை...
திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயிலில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுப்பு
admin - 0
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை யின் கீழ் உள்ளது.
இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீசிங்கீஸ் வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில்...
சென்னை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(29). இவர் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவந்த நிலையில், கடந்த 18-ம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பிவிட்டதா? என்பதைப் பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது 14-வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்தார். அவர் கால் தவறி விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்...
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்பதிவில்லாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், முன்பதிவு டிக்கெட் என அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களிலும் க்யூஆர் குறியீடு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும் பயணச் சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு மையங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்த...
திருவள்ளூர்: வேப்பம்பட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணி மந்தகதியில் நடைபெறுவதால், கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மக்களிடம் விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் வழியாக சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணி, நெடுஞ்சாலைத் துறை மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பணி கடந்த15 நாட்களுக்கும்...
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவ.1-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இவ்வாண்டு தீபாவளியை அக்.31-ம் தேதி கொண்டாடும் பொருட்டு, தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவ.1ம் தேதி அன்று...










