கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் கைதுக்கு சங்கங்கள் கண்டனம்
கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்ததற்கு, மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்....
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன்: திமுக ஐ.டி. பிரிவு மீது அதிமுக தரப்பு புகார்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட விவகாரத்தில் திமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம்...
சென்னை | இயந்திர கோளாறால் தரையிறங்கிய விமானம்
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு 70 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு புறப்பட்டது. விமானம்...
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய வேண்டும்: லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற...
பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ்
பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என்று பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம்...
சென்னை, புறநகரில் வெளுத்து வாங்கிய திடீர் மழை – வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்தது. லேசான மழையால் சிறிது...
ஆஸ்திரேலியா அருகே தனி நாடான கைலாசாவில் இருக்கிறார் நித்யானந்தா: உயர் நீதிமன்றத்தில் பெண் சீடர் தகவல்
ஆஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார்.
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய...
திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை: அன்புமணி கருத்து
திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சேலம் மாவட்டம் பாமக...
கிண்டி கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ கட்டுமான பணிகளை முதல்வர் ஆய்வு
கிண்டி கத்திப்பாராவில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்...
என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு
என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் அவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:...