Google search engine
டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை​கள் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் பெட்​ரோலி​யம் டீலர்கள் மீது மேற்​கொள்​ளப்​படும் தேவையற்ற நடவடிக்​கைகளுக்கு தமிழக பெட்​ரோலிய டீலர்​கள் சங்​கம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது குறித்​து, அச்​சங்​கத் தலை​வர் கே.பி.​முரளி வெளி​யிட்ட அறிக்​கை: பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​களின் கீழ் இயங்​கும் பெட்​ரோல் பங்க் உரிமை​யாளர்​கள் தினசரி ஆயிரக்​கணக்​கான வாடிக்​கை​யாளர்​களுக்கு சேவை வழங்கி வரு​கின்​றனர். பண மதிப்​பிழப்பு நடவடிக்​கைக்​குப் பிறகு, ரொக்​கமில்லா பரிவர்த்​தனை​களை ஊக்​குவிக்​கும் மத்​திய அரசு மற்​றும் எண்​ணெய் நிறு​வனங்​களின்...
காட்​டுப்​பாக்​கம் கால்​நடை ஆராய்ச்சி மையத்​தில் சந்தன மரங்​கள் வெட்​டிக் கடத்​தப்​பட்​ட​தாக வெளி​யான செய்​தி​கள் தவறானது என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது. வளாகத்​தில் சந்தன மரங்​கள் எது​வும் பராமரிக்​கப்​பட​வில்லை என்று விளக்​கம் அளித்​துள்​ளது. தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின் கட்​டுப்​பாட்​டில் செங்​கல்​பட்டு மாவட்​டம் காட்​டுப்​பாக்​கத்​தில் இயங்கி வரும் கால்​நடை ஆராய்ச்சி மையத்​தில் சமீபத்​தில் பல கோடி மதிப்​புள்ள சந்தன மரங்​கள் வெட்​டிக் கடத்​தப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகின. இதை...
தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்கு எதிர்ப்பு தெரி​வித்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது. தமிழகத்​தில் மாவட்​டம்​தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்​யால​யா’ பள்​ளியை நிறுவ அனு​ம​திப்​பது தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் சமீபத்​தில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ‘மாவட்​டம்​தோறும் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவது குறித்த தமிழக அரசின் நிலைப்​பாடு மற்​றும் பள்​ளிக்​கான நிலங்​களை அடை​யாளம் காண்​பது குறித்து 3 வாரத்​துக்​குள் தெரிவிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து,...
பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவின் நிறு​வனம் சார்​பில் தமிழகம் முழு​வதும் தின​மும் 31 லட்​சம் லிட்​டரும் சென்​னை​யில் தின​மும் 16 லட்​சம் லிட்​டருக்​கு அதி​க​மாகவும் பால் விற்​பனை செய்​யப்​பட்​டது. தமிழகத்​தில் சென்னை உள்​ளிட்ட அனைத்து மாவட்​டங்​களி​லும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாட்​களாக கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. ஏழைகள், குழந்​தைகளுக்கு வரப்​பிர​சாத​மாக விளங்​கும் ஆவின் பால் அனைத்து மக்​களுக்கு தடை​யின்றி கிடைப்​பதை உறுதி செய்ய...
நெல், கரும்​புக்​கான ஊக்​கத்​தொகை உயர்வுக்கு விவ​சாய சங்​கங்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்ள நிலை​யில், சில அரசி​யல் கட்​சி​யினர் அது போது​மானதல்ல என்று கூறியுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி: அரசால் கொள்​முதல் செய்​யப்​படும் நெல்​லுக்கு வழங்​கப்​படும் ஊக்​கத்​தொகை சன்ன ரக நெல்​லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்​லுக்கு ரூ.159 ஆகவும், கரும்​புக்கு ரூ.709.50 ஆகவும் உயர்த்தி தவெக அரசு அறி​வித்​துள்​ளது. இது போது​மானதல்ல. கரும்​புக்​கான ஊக்​கத் தொகை​யாக ரூ.1,117...
வெளி மாநிலங்​களுக்கு கனிமங்​களை கொண்டு செல்ல விதிக்​கப்​பட்ட தடையை அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கல்​கு​வாரி, கிரஷர் மற்​றும் லாரி உரிமை​யாளர் சங்​கம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது. திண்டுக்கல்லில் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் சின்​னச்​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: கடந்த ஜூலை 27 முதல் வெளி மாநிலங்​களுக்கு கனிம வளங்​களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தற்​காலிகத் தடை விதித்​துள்​ளது. இதனால் எல்​லை​யோர மாவட்​டங்​களில் உள்ள குவாரி உரிமை​யாளர்​கள், தொழிலா​ளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பல...
ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லின் கிழக்கு பகு​தி​யில் உள்ள புதுப்​பிக்​கப்​பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப் பாதையை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு நேற்று அமைச்​சர் ரமேஷ் திறந்​து​வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் 21 கோபுரங்​களில் ஒன்​றான தாமோதர கிருஷ்ணன் கோபுரத்​தின் மராமத்துபணி​கள் 2023-ல் தொடங்​கி, தற்​போது பணி​கள் முடிந்து மக்கள்பயன்​பாட்​டுக்​காக திறக்​கப்​பட்​டுள்​ளன. பல்வேறு சட்​டப் போராட்டங்​கள் மூலம் பழநி கோயில் நிலத்தை மீட்​டுள்​ளோம். கடந்த ஆட்​சிக்​காலத்​தில் மதுரை மீனாட்சி...
 தமிழகம் முழு​வதும் கடந்த 2024-ம் ஆண்டு நில​வரப்​படி நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் 102 செயற்​பொறி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக இருந்​தன. தற்​போது அது அதி​கரித்​துள்​ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் 100 உதவி செயற்​பொறி​யாளர்​கள் மற்​றும்பிற மாநக​ராட்​சிகளில் பணி​யாற்​றும் 16 உதவி செயற்​பொறி​யாளர்​களுக்​கு, செயற்​பொறி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்க வேண்​டும் என்று நகராட்சி நிர்​வாகத்​துறை, அரசுக்கு கருத்​துரு அனுப்பி இருந்​தது. இதற்​கிடை​யில் உதவி செயற்​பொறி​யாளர்​கள் 3 பேர், பதவி உயர்வு தொடர்​பாக உயர்...
யானைக்க​வுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்​கக் கோரி, 50-க்​கும் மேற்​பட்ட தண்​ணீர் லாரி​களை சிறைபிடித்​து, மேத்யூ ரயில்வே குடி​யிருப்பு வாசிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை யானைக் கவுனி பாலத்​தின் கீழே சால்ட் கொட்​டாய் பகு​தி​யில் நீரேற்று நிலை​ய​மும், மேத்யூ ரயில்வே குடி​யிருப்​பும் உள்​ளது. இங்கு ரயில்வே பாது​காப்பு படை​யினர் (ஆர்​பிஎஃப்), ரயில்வே போலீஸ், ரயில்வே தொழில்​நுட்ப பணி​யாளர்​கள் என 100 குடும்​பத்​தினர் வசிக்​கின்​றனர். ஒரு...
தமிழகம் முழுவதும் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சைபர் மோசடியில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ அதிகாரிகள், மும்பை கமிஷனர், வருமான வரித் துறை கமிஷனர் என பல உயரதிகாரிகளின் பெயர்களைக் கூறி பல கும்பல்கள் பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வருகிறது. வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் அழைக்கும்...