Google search engine
ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:...
கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமப் பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகையாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈசிஆர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக, ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீஸாரும் இணைந்து சாகர் கவாச் எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை 4 மற்றும்...
“தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது,” என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களின் பாடத்திட்டத்தை விட மிகவும் தாழ்வானது. தமிழக மாணவர்கள் இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறானது. தமிழக பாடத்திட்டம் 2017-18-ம் ஆண்டில், அப்போதைய...
 ''கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத கடை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில்,...
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வட்டச் செயலாளர்கள், “கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. கட்சியிலிருந்து என்ன பயன்? இந்தக் கட்சியில் இருப்பதும் ஒன்றுதான், இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்” என தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். திருச்சி மேற்கு மாநகர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது. அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை...
மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைப்பொருட்களை சேகரித்து விற்பனை...
முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவை மயிலாப்பூர் அலுவலகம் அழைத்து வந்து போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் குணசீலன்,...
தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறஉள்ளது. இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப்...
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு திமுக அரசே காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.க.நகர் தொகுதி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓர் அரசு, ஏழை மாணவர், மாணவிகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டுப்...
தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பறை இசை மற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முதல்வர்...