நீலக்கொடி கடற்கரை திட்டத்தில், மெரினா கடற்கரையில் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நூற்றாண்டுகள் பழமையான சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்தவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களை கோரியுள்ளது.
சர்வதேச தரத்தைப் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கோவளம் கடற்கரை மட்டுமே இந்த சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக,...
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம்தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில்விபத்துக்கு உள்ளானது. இதில், அந்த ரயிலின் 12பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர்.
ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிமுனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன்...
மக்களவை தேர்தலில் திமுக செல்வாக்கு உயர்ந்துள்ளது: எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
admin - 0
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.உமா வரவேற்றார். விழாவுக்கு, தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம். கடந்த சில நாட்களாக 3 ஆண்டுகள் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்து...
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில், புதியகலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணைய வழியில் அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப்பேத்தியும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா. மனோன்மணி பேசியதாவது: தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.
எதிர்காலத்தில்...
பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் தங்கள் வீட்டருகே உள்ள பொதுசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னர்,...
மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு? – அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது குற்றச்சாட்டு
admin - 0
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனதுமகன்கள் மூலம் அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையேபிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாகஅபகரித்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இந்த நிலங்கள்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஓசூரில் 2,000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், பெங்களூருவில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக, 3 ஆயிரம் ஏக்கர் காலி இடம் உள்ள சோமனஹள்ளி என்ற பகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
இரு விமான நிலையங்களுக்கு இடையில் 50 கி.மீ.க்கு மேல் இடைவெளி இருக்க...
தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும்: பாமக, அமமுக வலியுறுத்தல்
admin - 0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புமணி: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனியார் பேருந்துகளுக்கு கி.மீ.க்கு ரூ.51.25 வீதம் வாடகையாக வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்...
ஊராட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பு: ஆதிதிராவிடர் நல இயக்குநர் பதில் தர எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு
admin - 0
சென்னை: ஆதிதிராவிடர் ஊராட்சித் தலைவர்களை சந்திக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அக்.30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் கடந்த திங்கள் கிழமை வெளியாகியிருந்தது....
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (06209) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து அக்.30, நவ.3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.55 மணிக்கு சிறப்பு ரயில் (06210) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான...










