கவரைப்பேட்டை விபத்து குறித்து ரயில்வே ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை

0
48

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம்தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில்விபத்துக்கு உள்ளானது. இதில், அந்த ரயிலின் 12பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர்.

ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிமுனி பிரசாத் பாபு அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3டி.எஸ்.பி-கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 3 குழுக்களாக பிரிந்து, விசாரிக்கின்றனர்.

நிலைய மேலாளர், பாய்ன்ட் மென், விபத்து நடைபெற்ற நேரத்தில் பணியில்இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திஉள்ளனர். ரயிலை கவிழ்க்கசதி என்ற சட்டப்பிரிவில் தமிழக ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here