தேர்தல் நாள் அப்டேட்களை செயலியில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி

0
21

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்​குப் பதிவு வரும் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான தொழில்​நுட்ப ஆயத்​தப் பணி​களில் ஒரு முக்​கிய மைல்​கல்​லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) குறித்த மாநில அளவி​லான பயிற்சி முகாம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. இசிஐ நெட் புரோ மாட்​யூல் என்​பது தேர்​தல் பணி​யில் இருக்​கும் தலைமை வாக்​குச்​சாவடி அலு​வலருக்​காக உரு​வாக்​கப்​பட்ட ஒரு செயலி​யாகும்.

வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி பொருட்​கள் வரு​கை, மாதிரி வாக்​குப்​ப​திவு, வாக்​குப்​ப​திவு தொடக்​கம், அந்​தந்த நேரப்​படி வாக்​குப்​ப​திவு சதவீதம் அப்​டேட், வாக்​குப்​ப​திவு நிறைவு போன்ற தேர்​தல் நாள் அப்​டேட்​களை அதி​காரி​கள் கைபேசி செயலி மூலம் நேரடி​யாக பதிவு செய்ய இந்த புரோ மாட்​யூலை பயன்​படுத்​துகிறார்​கள்.

இந்த பயிற்​சி​யில் அனைத்து தொகு​தி​களின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மற்​றும் தொடர்​புடைய பிற அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் மூத்த அதி​காரி​கள், சந்​தோஷ் பதா​ரியா மற்​றும் தருண் மிஸ்ரா ஆகியோர் இந்​நிகழ்​வில் கலந்து கொண்​டனர்.

அவர்​களின் வழி​காட்​டு​தலின் கீழ், மூத்த அதி​காரி​கள் மற்​றும் தொழில்​நுட்​பப் பணி​யாளர்​களுக்கு புரோ மாட்​யூலை பயன்​படுத்​து​வது குறித்த நேரடிப் பயிற்சி வழங்​கப்​பட்​டது.

தேர்​தல் வாக்​குப் பதிவு நாளில் வாக்​குப் பதிவு விவரங்​களை எவ்​வித தாமத​முமின்றி உடனுக்​குடன் வழங்​கு​வதற்​காக, வாக்​குப்​ப​திவு தரவு​களை டிஜிட்​டல் முறை​யில் நிர்​வகிக்​க​வும், பதிவேற்​ற​வும் அனைத்து தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மற்​றும் தொழில்​நுட்​பப் பணி​யாளர்​களுக்​குத் தேவை​யான முழு​மை​யானத் திறனை வழங்​கு​வதை​யும், இசிஐநெட் அமைப்​பைச் செயல்​படுத்​து​வதை​யும் மைய​மாகக் கொண்டு இந்​தப் பயிற்சி வழங்​கப்​பட்​டது.

இப்​ப​யிற்சி மட்​டுமின்றி அனைத்து தொகு​தி​களி​லும் இசிஐநெட் செயலி​யில் உள்ள புரோ மாட்​யூல் பயன்​பாட்​டை உறுதி செய்​யும் வித​மாக கள சோதனை​யானது வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் மூலம் வாக்​குச்​சாவடி மையங்​களில் இருந்து மேற்​கொள்​ளப்​பட்​டது.

மண்டல அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களின் மேற்​பார்​வை​யாளர்​கள் ஆகியோர், நேரடிச் சூழலில் புரோ மாட்​யூல் எவ்​விதக் குறை​யுமின்​றிச் செயல்​படு​வதை உறு​தி​செய்​யும் வகை​யில், இச்​செயல்​முறையை நிகழ்​நேரத்​தில் கண்​காணித்​தனர்.

இன்​றைய பயிற்சி மற்​றும் களச் சோதனை​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், புரோ மாட்​யூல் செயல்​பாடு​கள் குறித்த இறு​திக்​கட்​டக் கள சோதனை, நாளை (15-ம் தேதி) அனைத்து வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​களால் நடத்​தப்​படவுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here