ராஜராஜ சோழனின் சதய விழாவை சிறப்புற நடத்த அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

0
6

நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை,போர்த்திறன் எனப் பலவற்றிலும் தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் ராசராசச் சோழன்.

அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ம் ஆண்டு திராவிட மாடல் அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், துறை வாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திமுக ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்

பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் த.வெ.க. அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக. அரசர்க்கரசரின் புகழ் வாழ்க’ எனத் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here