மக்கள் நலனுக்காகத்தான் மோடியுடன், விஜய் இணைந்து பணியாற்றுகிறார்: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

0
11

முதல்​வர் விஜய்யிடம் இரட்டை நிலைப்​பாடு எது​வும் இல்லை எனவும், மக்​கள் நலனுக்​காகத் தான் பிரதமர் மோடியுடன் அவர் இணைந்து பணி​யாற்​றுகிறார் எனவும் வரு​வாய்த் துறை அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

திருச்சி மாவட்ட ஆட்சி​யர் அலு​வல​கத்தில் நேற்று நடை​பெற்ற வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்​டத்​தில் பங்​கேற்ற அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் அடுத்த ஆண்டு டிசம்​பருக்​குள் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு பட்டா வழங்க நட​வடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இப்​பணிக்​காக 1,500 நில அளவையர்​கள் தற்​காலிக​மாக பணி நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தமிழக அரசு எடுத்த முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகள் காரண​மாக மழையால் எந்த பாதிப்​பும் ஏற்​படா​மல், மக்​களின் பாது​காப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் ரூ.4 ஆயிரம் கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட மழைநீர் வடிகால் பணிகளில் 40 சதவீதத்தை கூட அவர்​கள் முடிக்​க​வில்லை. தவெக அரசு பொறுப்​பேற்ற 4 மாதங்​களில் இப்​பணிகள் விரைந்து முடிக்​கப்​பட்​டுள்​ளன என்​றார்.

முன்​னதாக திருச்சி விமான நிலை​யத்​தில் கூறும்​போது, ‘முதல்​வர் விஜய் குறித்து திமுக​வினர் தொடர்ந்து அவதூறாக பேசி வரு​கின்​றனர். அரசி​யலில் நாகரீகம் கடைப்​பி​டிப்​பது முக்​கிய​மான ஒன்று. முன்​னாள் முதல்​வர் பழனிசாமியும் அப்​படித்​தான் பேசி வரு​கிறார். பழனிசாமியும், திமுகவும் வேறு அல்ல. இரு​வருமே அரசி​யல் களத்​தில் ஒன்​றுதான்’ என்​றார்.

தொடர்ந்து, புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை​யில் நேற்று நடை​பெற்ற அரசு விழா​வில் பங்​கேற்ற அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது,’ சீரமைப்பு பணிகள் காரண​மாக உள்​ளாட்​சித் தேர்​தல் தள்​ளிப்​போடப்​பட்​டுள்​ளதே தவிர அச்​சத்​தின் காரண​மாக அல்ல. முதல்​வர் விஜய் இரட்டை நிலைப்​பாட்​டில் அல்​லாமல், தனது கொள்​கை​யில் உறுதி​யுடன் இருக்​கிறார். மக்​கள் நலனுக்​காகத் தான் பிரதமர் மோடியுடன் அவர் இணைந்து பணி​யாற்​றுகிறார். சென்னை விமான நிலை​யத்தை தனியார் வசம் ஒப்​படைப்​பது குறித்து தற்​போது கருத்து தெரி​விக்க இய​லாது’ என்​றார்.

விராலிமலை​யில் விஜயபாஸ்​கர்?

விராலிமலை​யில் நடை​பெற்ற அரசு விழா​வில் அமைச்​சர் செங்​கோட்​டையன் பேசும்​போது, “முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் மீண்​டும் களத்​தில் நிற்​கப் போகிறார். அத்​துடன் அவர் வெற்றி பெற்று முதல்​வர் விஜய்க்கு பின்​னால் இருந்து பணி​யாற்​று​வார்” என்​றார். அதன்​பின், “விராலிமலை​யில் முன்​னாள் அமைச்​சர் விஜயபாஸ்​கர் மீண்​டும் போட்​டி​யிடப் போகிறாரா?” என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்கு, “நான் தேர்​தலுக்​காக சொல்​ல​வில்லை, பொது​வாகத் தான் கூறினேன்” என பதிலளித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here