நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரதமரின் பிரச்சார வாகனத்தில் உடன் செல்கின்றனர்.













