87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது

0
21

நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.

இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி அர்ச்சனா, 39, ஆகியோர் குடியேறினர். தங்களை கணவன் – மனைவி என அறிமுகம் செய்து, சுபாஷ் பிரசாத் பாட்டிலுடன் நட்புடன் பழகினர்

சம்பவத் தன்று, லட்டில் மயக்க மருந்து கலந்து, சுபாஷ் பிரசாத் பாட்டிலுக்கு கொடுத்து மயங்க வைத்து, ‘கேஸ் கட்டர்’ உதவியுடன் வீட்டு லாக்கரை உடைத்து, 87 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்து தப்பி னர். ஒடி ஷா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இருவரும் கள்ளக்காதல் ஜோடி என, தெரிந்தது. இவர்கள், பல மாநிலங்களில் இதுபோன்ற கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர விசாரணையில், நாகர்கோவில் அருகே, தோவாளையில் உள்ள ஒரு ஹோட்டலில், இருவரும் வேலை செய்வது தெரிந்தது. நாகர்கோவில் வந்த ஒடிஷா போலீசார், ஆரல்வாய்மொழி போலீசாருடன் சென்று, இருவரையும் கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here