சார்லஸ் டி கெட்டேலேரே 2 கோல்கள் அடித்து அசத்தல்: அமெரிக்காவை துவம்சம் செய்தது பெல்ஜியம்

0
21

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்​டில் மைதானத்​தில் பெல்ஜியம் – அமெரிக்கா அணி​கள் மோதின. ஆட்டத்​தின் 9-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி முதல் கோலை அடித்​தது.

பெல்ஜியம் அணி​யின் வீரர் லுகே​பாக்​கியோ வலது பக்கத்திலிருந்து இடது பக்​கத்​திற்கு கொடுத்த தொலை​தூர பாஸ் நேராக ட்ரோஸார்டை சென்​றடைந்​தது. இதன் பின்​னர் ட்ரோஸார்ட் அடித்த கிராஸை அமெரிக்க அணி​யின் வீரர் ஃப்​ரீமேன் தடுத்​தார். ஆனால் மற்​றொரு அமெரிக்க வீர​ரான ரிச்சர்ட்ஸ் அதை தலை​யால் முட்டி விலக்​கி​விடத் தவறி​னார்.

இந்​தத் தவறை சரி​யாக பயன்​படுத்​திய பெல்​ஜி​யம் அணி​யின் நிக்​கோலா ரஸ்​கின், துள்​ளிக் குதித்த பந்​தைக் கட்​டுப்​படுத்​தி, 18 அடி தூர பாக்​ஸிற்​குள் புகுந்​து, கோல் போஸ்ட்​டின் முகப்பை நோக்கி பந்தை தாழ்​வாக பாஸ் செய்​தார். அங்கே ஊடுருவி நுழைந்த சார்​லஸ் டி கெட்​டேலேரே எளி​தாக பந்தை கோல் வலைக்​குள் தட்​டி​விட்​டார். இதனால் பெல்​ஜி​யம் அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

31-வது நிமிடத்​தில் அமெரிக்கா பதிலடி கொடுத்​தது. அமெரிக்க வீரர் மாலிக் தில்​மேன் ஃபிரீ-கிக்​கில் உதைத்த பந்​து, பெல்​ஜி​யம் தற்​காப்பு அரண் மீது பலமாகப் பட்டு திசை​மாறி கோல்​கீப்​பரை ஏமாற்றி நேராக கோல்​வலையை துளைத்​தது. இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது. ஆனால் அடுத்த இரு நிமிடங்​களில் பெல்​ஜி​யம் அணி கோல் அடித்து மிரட்​டியது.

33-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணி​யின் யூரி டீலெமன்ஸ் இடது விங்​கில் மார்க்​கிங் செய்​யப்​ப​டா​மல் இருந்த ட்ரோஸார்​டுக்கு பந்தை பாஸ் செய்​தார். அவர், பைலைனுக்கு அருகே இருந்து பந்தை பாக்ஸ் பகு​திக்​குள் தூக்கி அடித்​தார். அங்கு தயா​ராக இருந்த சார்​லஸ் டி கெட்​டேலேரே, அமெரிக்க அணி​யின் டிஃபென்​டர்​களுக்கு ஊடாக துள்​ளிய​வாறு தலை​யால் முட்டி பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் பெல்​ஜி​யம் அணி முதல் பாதி ஆட்​டத்​தில் 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

57-வது நிமிடத்​தில் மெகலென், பெல்​ஜி​யம் அணி​யின் தற்​காப்​புப் பகு​தியி​லிருந்து பந்தை அமெரிக்​கப் பகு​தியை நோக்கி உதைத்​தார். அப்​போது வேக​மாக ஓடிவந்த டி கெட்​டேலேரே​வைத் தடுப்​ப​தற்​காக, அமெரிக்​கக் கோல் கீப்​பர் மேட் ஃபிரீஸ் தனது பகு​தி​யில் இருந்து வெகுதூரம் வெளியே ஓடி வந்​தார். பந்தை உதைத்து லாங் கிளியர் செய்ய முயன்ற மேட் ஃபிரீஸ், முதல் முயற்​சி​யிலேயே பந்​தைச் சரி​யாக உதைக்​கத் தவறி​னார்.

இதை பயன்​படுத்​திக் கொண்ட பெல்​ஜி​யம் அணி​யின் டி கெட்​டேலேரே, பந்தை அவரிட​மிருந்து தட்​டிப் பறித்து தனக்கு முன்​னால் இருந்த ஹான்ஸ் வனாக​னுக்கு தட்​டி​விட்​டார். அவர், பந்தை தொலை​வில் இருந்து தாழ்​வாக அடித்த ஷாட் கோல் வலைக்​குள் பாய்ந்​தது. இதனால் பெல்​ஜி​யம் அணி 3-1 என்ற கணக்​கில் வலு​வான முன்​னிலையை எட்​டியது.

இதன் பின்​னர் பெல்​ஜி​யம் அணி தாக்​குதல் ஆட்​டத்தை மேற்​கொண்டு அமெரிக்க அணிக்கு அச்​சுறுத்​தல் கொடுத்​தது. காயங்களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 90+3-வது நிமிடத்​தில் ஹான்ஸ் வனாகன் உதவி​யுடன் பந்தை பெற்ற சீனியர் நட்சத்திரமான ரோமலு லுகாகு கோல் அடித்து அசத்​தி​னார். முடிவில் பெல்​ஜி​யம் அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. கால் இறுதி சுற்​றில்​ பெல்​ஜி​யம்​ அணி, ஸ்பெ​யினுடன்​ பலப்​பரீட்​சை நடத்​துகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here