75-வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடும் தெற்கு ரயில்வே

0
33

இந்​திய ரயில்வேயின் மிகப்​பழமை​யான மண்​டலங்​களில் ஒன்​றான தெற்கு ரயில்வே இன்று (ஏப்​.14) 75-வது நிறுவன தினத்​தைக் கொண்​டாடு​கிறது.

மெட்​ராஸ் மற்​றும் தென் மராட்​டிய ரயில்​வே, தென்​னிந்​திய ரயில்வே மற்​றும் மைசூர் மாநில ரயில்வே ஆகிய 3 அமைப்​பு​களை ஒன்​றிணைத்து தெற்கு ரயில்வே கடந்த 1951-ம் ஆண்டு ஏப்​.14-ம் தேதி உரு​வாக்​கப்​பட்​டது.

தென்​னிந்​தி​யா​வில் ரயில்​வே​யின் வரலாறு 1856-ல் ராயபுரம் முதல் ஆற்​காடு (வாலாஜா ரோடு) வரை இயக்​கப்​பட்ட முதல் ரயி​லிலிருந்து தொடங்​கு​கிறது.

பரிணாம வளர்ச்சி

1860-களில் மேற்கு கடற்​கரை இணைப்​பு, 1870-களில் மும்பை இணைப்பு மற்​றும் 1900-களில் ஹவுரா இணைப்பு எனத் தேசிய அளவில் இது விரிவடைந்​தது. 1899-ல் நீல​கிரி மலை ரயில் மற்​றும் 1925-ல் பாம்​பன் பாலம் போன்​றவை பொறி​யியல் அதிச​யங்​களாகத் திகழ்ந்​தன.

நிர்​வாக வசதிக்​காக, 1966-ல் தென் மத்​திய ரயில்​வே​யும், 2003-ல் தென் மேற்கு ரயில்​வே​யும் பிரிந்து உரு​வாகின. தற்​போது சென்​னை, மதுரை, திருச்​சி​ராப்​பள்​ளி, சேலம், பாலக்​காடு மற்​றும் திரு​வனந்​த​புரம் ஆகிய 6 கோட்​டங்​களு​டன் 5,100-க்​கும் மேற்​பட்ட கிலோ மீட்​டர் தூரத்​துக்​குத் தெற்கு ரயில்வே சேவை வழங்​கு​கிறது.

பல்​வேறு பாரம்​பரி​யம் மற்​றும் சிறப்​பு​களைக் கொண்ட தெற்கு ரயில்வே தனது 75 ஆண்​டுக்​காலப் பயணத்​தைக் கொண்​டாடும் வேளை​யில், தெற்கு ரயில்வே பாரம்​பரி​யத்​தைப் பாது​காப்​ப​தோடு மட்​டுமல்​லாமல், நவீன தொழில்​நுட்​பம், பாது​காப்பு மற்​றும் பயணி​களுக்​கான உலகத்​தரம் வாய்ந்த வசதி​களை வழங்​கு​வ​தில் உறு​தி​யாக உள்​ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் இவ்வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here