லண்டனில் இருந்து 236 பேருடன் சென்னை வந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் அதிர்ச்சி

0
21

லண்​டனில் இருந்து 236 பேருடன் சென்​னைக்கு வந்த விமானத்​தின் மீது பறவை மோதி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. விமானி மிக​வும் சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டு, விமானத்தை பாது​காப்​பாக தரை​யிறக்​கி​னார்.

லண்​டனில் இருந்து புறப்​படும் பயணி​கள் விமானம் தின​மும் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை வந்து விட்​டு, மீண்​டும் சென்​னை​யில் இருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்​பட்டு செல்​வது வழக்​கம்.

அதன்​படி, நேற்று லண்​டனில் இருந்து 224 பயணி​கள், 12 விமான ஊழியர்​களு​டன் புறப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் சென்​னைக்கு வந்து கொண்​டிருந்​தது. அதி​காலை 3 மணிக்கு சென்​னை​யில் தரை​யிறங்க தயா​ரானது.

அந்த விமானம் படிப்​படி​யாக உயரத்​தை​யும், வேகத்​தை​யும் குறைத்​து, சென்​னை​யில் தரை​யிறங்​கு​வதற்​காக சுமார் 500 அடி உயரத்​தில் பறந்து கொண்டு இருந்த போது, திடீரென விமானத்​தின் முன்​பகு​தி​யில் பறவை ஒன்று மோதி, விமானத்​தின் இன்​ஜின் பகு​திக்​குள் சிக்​கிக் கொண்​டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, மிக​வும் சாமர்த்​தி​ய​மாக செயல்​பட்​டு, விமானத்தை பாது​காப்​பாக தரை​யிறக்​கி​னார். இதையடுத்​து, விமான பொறி​யாளர்​கள் குழு​வினர், பாது​காப்பு அதி​காரி​கள் விமானத்தை ஆய்வு செய்​தனர்.

பறவை மோதி விமானம் சேதம் அடைந்​துள்​ள​தால், அந்த விமானத்தை உடனடி​யாக மீண்​டும் இயக்க முடி​யாது. பராமரிப்பு பணி​கள் செய்து முடித்த பின்பு தான் விமானத்தை இயக்க வேண்​டும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அந்த விமானத்​தில் சென்​னை​யில் இருந்து லண்​டனுக்கு செல்ல 268 பயணி​கள் முன்​ப​திவு செய்​திருந்​தனர். இந்த சம்​பவம் குறித்​து, டெல்​லி​யில் உள்ள இந்​திய விமான போக்​கு​வரத்து இயக்​குநரகம், முழு​மை​யான வி​சா​ரணைக்​கு உத்​தர​விட்​டுள்​ளது. இச்சம்பவத்தால்,சென்​னை வி​மான நிலை​யத்​தில்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here