தமிழ்நாடு விழா பேச்சு-கட்டுரை போட்டிகள்: மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு

0
22

தமிழ்​நாடு விழாவை முன்​னிட்டு, பள்ளி மாணவர்​களுக்கு நடத்​தப்​படும் மாநில அளவி​லான பேச்​சு,கட்​டுரை போட்​டிகளில் முதலிடம் பெறு​வோருக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்​போருக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெறு​வோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்​கப்​படும் என அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, பள்​ளிக்​கல்வி, தமிழ்​வளர்ச்​சி, செய்தி மற்​றும் விளம்​பரத்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் வெளி​யிட்​டுள்ள ஓர் அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாகாணத்​துக்கு தமிழ்​நாடு என பெயர் சூட்​டப்​பட்டநாள் தமிழ்​நாடு விழா​வாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது.

தமிழ்​நாடு நாள் விழாவை முன்​னிட்டு தமிழ்​வளர்ச்​சித்​ துறை சார்​பில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு பேச்​சுப்​போட்​டி,கட்​டுரைப் ​போட்டி நடத்​தப்​படு​கின்​றன. இது வெறும் போட்டி மட்​டுமல்ல.

நமது தமிழ்​மொழி​யின் பெரு​மை​யுடன் தமிழகத்​தின் வரலாற்றை பறை​சாற்​றும் பெரு​விழா ஆகும். எனவே, இந்த போட்​டிகளில் பள்ளி மாணவ-​மாணவி​கள் உற்​சாக​மாக பங்​கேற்று தங்கள் திறமை​களை வெளிக்​கொண்டு வர வேண்​டும் என்​பது​தான் என் ஆவல்.

தமிழ்​நாடு விழாவை முன்​னிட்டு, மாவட்ட அளவில் வெற்​றி ​பெற்று மாநில அளவி​லான போட்​டி​யில் பங்​கேற்​கும் மாணவர்​களுக்கு முதல் பரி​சாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரி​சாக ரூ.30 ஆயிரம், மூன்​றாம் பரி​சாக ரூ.20 ஆயிரம் பரிசும், பாராட்​டுச்​சான்​றிதழும் வழங்கி பெரு​மைப்​படுத்த உள்​ளோம்.

ஒவ்​வொரு மாவட்ட ஆட்​சி​யரும் தமிழ்​வளர்ச்​சித் ​துறை வாயி​லாக மாவட்ட அளவி​லான போட்​டியை ஜூலை 15-ம் தேதிக்​குள் நடத்​து​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்.

ஆசிரியர்​களும், பெற்​றோரும் மாணவர்​களை இந்த போட்​டிகளில் உற்​ச​மாக​மாக பங்​கேற்​கச் செய்து தமிழ்​நாடு விழாவை ஒரு சரித்​திர புரட்​சி​யாக மாற்​றிக்​காட்​ட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here