தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
admin - 0
வங்கக்கடல், அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், டெல்டா உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,...
திருக்குறளில் காணப்படும் மேலாண்மைக் கருத்துகள் குறித்த ‘யெஸ் பாஸ்’ எனும் இந்தி நூல் வெளியீட்டு விழா திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மேலாண்மைக் கழக இயக்குநர் பவன் குமார் சிங் நூலை வெளியிட்டு பேசும்போது, ‘‘மேலாண்மையில் குறள்கள் பற்றிய 60 கட்டுரைகளே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்போது, 1,330 குறள்களையும் படித்து விட்டால் எவ்வளவு நன்மை அடையலாம் என்பது புரிகிறது’’ என்றார்.
முதல் பிரதியை பெற்றுக் கொண்டு,...
சென்னையில் எவ்வளவு அதிக மழை வந்தாலும், அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த அக்.1 முதல் நவ.12-ம் தேதி வரை 43 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று 2.6...
நண்டு பிடிக்க மனைவியுடன் சென்றவர் அடையாறு ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டார். அவரை தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (48). இவர் அவரது மனைவி செல்வி மற்றும் மகனுடன் கடந்த 2 ஆண்டுகளாக அடையாறு பகுதியில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை இல்லாத நேரத்தில் குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் அருகே உள்ள அடையாறு...
சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர்,...
திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதியும் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியும் காரணம் தெரியவில்லை. இதையடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், பெற்றோருடன் வருவாய் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும்...
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர...
இண்டர்நேஷனல் இன்ஜினியரிங் சோர்சிங் ஷோ என்று அறியப்படும் சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் 12-வது பதிப்பு இம்மாதம் 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் (இஇபிசி) தலைவர் அருண் கரோடியா கூறியதாவது: சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நவம்பர் 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மிகப்பெரிய அளவில்...
பதிவுத்துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திர பதிவுக்காக சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம்,...
பழம்பெரும் திரைப்பட நடிகையும் பரதக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு, ஐடிஎம் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை சென்னையில் வழங்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரத்தில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனம் ஐடிஎம் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா வரும் நவம்பர் 23-ம்தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.
வைஜெயந்திமாலா பாலி, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்தியப் பிரதேசகல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர்,...










