சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்ற ரூ.428 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் ரயில் முனையங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து, கூட்ட நெரிசலைக் குறைக்க, புதிய ரயில் முனையம் அமைக்கும் முயற்சி ரயில்வே நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்டது.
அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட்...
காலத்துக்கு ஏற்ப மொழி முன்னேற வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
‘செயற்கை நுண்ணறிவும் கலைகளும்’ என்ற தலைப்பில் முனைவர் மதன் கார்க்கி பேசும்போது, ‘‘“ஒரு கலையின் முக்கியமான பணி...
சென்னை கொடுங்கையூரில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
பின்னர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜியோ டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகராட்சி திடக்கழிவுகளைக் கையாள, சென்னை மாநகராட்சி ஒவ்வொரு நாளும் 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் உருவாக்க குப்பை எரிவுலையை வடசென்னையில் நிறுவ...
ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் செலுத்தும் வசதி திடீர் நிறுத்தம்
admin - 0
மின்வாரிய அலுவலகங்களில் ரூ.4 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டணத்தை நேரடியாக செலுத்தும் வசதி கணினியில் முடக்கப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பின்றி நடைமுறைப்படுத்துவதால் ஊழியர்களும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக மின்ஊழியர் மத்திய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2024-ம் ஆண்டு தரவுகளின்படி 3.45 கோடி மின்இணைப்புகள் உள்ளன.
இதில், தாழ்வழுத்த மின்நுகர்வோர் மட்டும் 3...
பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து…
வெள்ள நிவாரணமாக சென்னைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும்போது வடமாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்குவது பிச்சை போடுவது போல...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார்.
கோவை தெற்கு உக்கடம், பொன் விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இவர் இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக...
பாலியல் தொல்லை: கல்வியியல் பல்கலை. முன்னாள் பதிவாளரை இதுவரை கைது செய்யாதது ஏன்? – ஐகோர்ட் கேள்வி
admin - 0
மதுரையில் கல்வியியல் கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டும், இன்னும் அவரைக் கைது செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பெண் பேராசிரியர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல்...
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிச.24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம்...
ஊழல் குற்றச்சாட்டுள்ள அரசு அதிகாரிகள் அனைத்து பண பலன்களுடன் ஓய்வுபெற அனுமதிக்க கூடாது: நீதிபதிகள் கருத்து
admin - 0
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகும் அரசு அதிகாரிகள் அனைத்து பண பலன்களுடனும் ஓய்வு பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் பார்த்த வேலைகளுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம்...
தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைப்பு
admin - 0
தமிழகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக பாஜக மாநில மையக் குழு ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா,...









