Google search engine
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதை 2040-ம் ஆண்டுக்குள் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2040-ம் ஆண்டுக்குள்...
மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற செயல்களில் ஷாஜகான் ஈடுபட்டுவந்தார். உயர்நீதிமன்றம் விடுத்தகெடுவையடுத்து ஷேக் ஷாஜகானை மேற்கு வங்க போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர். இந்நிலையில் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம்...
மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது பாரபட்சமற்ற மற்றும் வன்முறையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்எஸ்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார் நிலை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தலில் அச்சம், மிரட்டல்போன்றவற்றுக்கு இடமில்லை. அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள...
மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், சந்தேஷ்காலியில் உள்ள அவரது வீட்டுக்கு சோதனையிட சென்றனர். அப்போது 200 பேர் கும்பல், அதிகாரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில்...
மணிப்பூரில் அம்மாநில அரசின் அனுமதி இல்லாமல் இடங்களின் பெயரை மாற்றினால் இனி 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இது தொடர்பான மசோதா கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மலைகள், ஏரிகள் உட்பட முக்கிய இடங்களின் பெயர்களை அரசின் அனுமதி இல்லாமல் மாற்றும் போக்கு காணப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், ‘மணிப்பூர் இடங்களின் பெயர்கள் 2024’ மசோதா கொண்டுவரப்பட்டது....
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62). இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று அவர் தனதுராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீதிபதி பதவியை நான் இன்று ராஜினாமா செய்துவிட்டேன். வரும் 7-ம் தேதி...
நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். தெலங்கானா மாநிலம், சங்காரெட்டியில் பாஜக சார்பில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: காங்கிரஸார் செய்த ஊழல்கள், முறைகேடுகளை நான் பகிரங்கமாக கூறுவதால் அக்கட்சியினர் என் மீது...
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மினி லாரி கவிழ்ந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டம் அம்ஹாய் தேவ்ரி கிராமத்தை சேர்ந்த 30-க்கும்மேற்பட்டோர் ஷாபுரா பகுதியில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதன் பிறகு மினி லாரி ஒன்றில் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் பட்ஜார் காட் என்ற இடத்தில் உள்ள...
கடந்த 2012-16 காலகட்டத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேசமுதல்வராக பதவி வகித்தார். அப்போது, சுரங்க குத்தகை சட்ட விரோதமாக நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அலகாபாத்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டுசிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகிலேஷ் யாதவ் சாட்சியாக சேர்க்கப்பட்ட நிலையில், சாட்சி விசாரணைக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால்,...
இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி மாற்று கட்சி வேட்பாளருக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதனியா கூறியதாவது:இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தொகுதிக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்தனர். மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட்...