Google search engine
தமிழரான வாராணசி ஆட்சியர் ராஜலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கு தேசிய அளவிலான மின் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு முதல்மத்திய அரசு சார்பில் தேசிய மின் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024-ம் ஆண்டுக்கான விருது உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு அளிக்கப்பட உள்ளது....
‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசு விரைவில் கவிழும்’’ என கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் தியாகிகள் தின பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூறினர். கொல்கத்தாவில் கடந்த 1993-ம் ஆண்டு மேற்குவங்க இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக திரிணமூல் காங்கிரஸ் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினம் அனுசரிக்கிறது. இந்தாண்டு...
கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உத்தரப் பிரதேச அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் வண்டிகள்,...
எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி, இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்” என்று கடுமையைாக சாடியுள்ளார். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை பற்றி பொய்யான கதைகளைப் பரப்பியவர்களை அமைதியாக்கியுள்ளது என்று கடந்த வாரம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். வேலைவாய்ப்பு பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின்...
திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டம் ரான்குடியா பகுதியில் நேற்று தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. தகவல் அறிந்து வந்த போலீஸார் பள்ளத்தில் இருந்து மொத்தம் 27 வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர். அவை 1971 வங்கதேசப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எனத் தெரிகிறது. வங்கதேச சுதந்திரப் போராட்ட முக்தி பாஹிணி அமைப்பினர் இந்த வெடிகுண்டுகளை இங்கு புதைத்து வைத்திருக்கலாம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி...
என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில்அசதுதீன் ஒவைசி செய்தியாளர் களிடம் பேசியதாவது: முஸ்லிம்கள் மீது மத்திய அரசு தனது ஓரவஞ்சனையை வெளிப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதும் தனது அரசியல் காழ்புணர்வால் பழி வாங்கும் தோரணையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது.டெல்லியில் உள்ள எனது...
அமெரிக்க ராணுவத் தளவாட நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில்,“பிரதமர் நரேந்திர மோடியை லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் டைக்லெட் சந்தித்து பேசினார். இந்தியா –அமெரிக்கா இடையிலான விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் சார்ந்த ஒத்துழைப்பில் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம்...
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் உள்ளார். அவர் வாரத்துக்கு இருமுறை தனது வழக்கறிஞர்களுடன் உரையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக இரண்டு முறை இணையம் வழியாக உரையாட அனுமதி கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நேற்று அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. கேஜ்ரிவாலின் மனுவை திஹார் சிறை அதிகாரிகள் தரப்பும், அமலாக்கத்...
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24 நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டில் தமிழ்நாடு 13 இலக்குகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்த இலக்குகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மதிப்பெண், தேசிய சராசரியைவிட அதிகம் ஆகும். தேசிய சராசரி மதிப்பெண் 71-ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு 78 மதிப்பெண் பெற்றுள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, ஆரோக்கியம், தரமான கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட 17 இலக்குகளை நிலையான வளர்ச்சிக் குறியீடாக ஐக்கிய நாடுகள்...
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 2025-ல் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. கங்கை, யமுனை மற்றும் பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உ.பி. மாநில அரசுடன் இணைந்து அகில இந்திய அகாடா பரிஷத்தும் செய்து வருகிறது. இந்த அமைப்பானது அனைத்து வகை துறவிகளின் தலைமை சபையாக செயல்படுகிறது.நாடு முழுவதிலும் இந்த அமைப்பில் உள்ள புனிதர்கள், மகாமண்டலேஷ்வரர்கள்,...