Google search engine
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டார் நேற்று 2-வது முறையாக திறக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரை, புனரமைப்பு பணிக்காக திறக்க மாநில அரசின் அனுமதியை தொல்பொருள் ஆய்வுத்துறை கோரியது. இதையடுத்து 46 ஆண்டுகளுக்குப் பின் ரத்ன பண்டார் கடந்த கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. அங்கு பழங்கால 7 சிறிய சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 36...
கர்நாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு...
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 62-ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அங்கு 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இதில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி அதிகஇடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2017 மற்றும் 2022-ல் நடந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. வரும் 2027-ல் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து...
ராஜஸ்தான் மாநில திறந்தநிலை பள்ளி வாரியம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வின்போது தேர்வு அறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ராஜஸ்தான் கல்வித்துறையின் தேர்வு கண்காணிப்புக் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொலு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விடைகளை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.இது தொடர்பாகத் தேர்வு கண்காணிப்புக் குழு தலைவர்...
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத்ன பண்டார் என்ற கருவூல அறை உள்ளது. ஒடிசா அரசு அனுமதி வழங்கியதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 14-ம் தேதி கருவூல அறை திறக்கப்பட்டது. அப்போது அங்கு 5 முதல் 7 சிறிய பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரத்ன பண்டாரை திறப்பதற்காக அமைக்கப்பட்ட 11 உறுப்பினர் கொண்ட குழுவின் தலைவர் விஸ்வநாத் ரத் கூறுகையில், ‘‘ரத்ன...
கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உத்தர பிரதேச அரசுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது 100-க்கும் மேற்பட குற்ற வழக்குகள் இருந்த நிலையில், உத்தர பிரதேச காவல் துறை இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக இவர்களை காவல் துறை அழைத்துச் சென்றபோது, கூலிப்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச்...
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிராவின் புனே உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகாரின் பேரில் வாசிம் மாவட்டத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதையடுத்து ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக பூஜா மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை...
மணல் கடத்தல் தொடர்பான மனுவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் அளிக்கத் தவறினால் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுகள் சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த தவறுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் அத்துமீறி நிகழ்ந்து வருவதாகக் கடந்த 2018-ம் ஆண்டில் மனுதாரர் அழகிரிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பாக...
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். தங்கத்தை மும்பை மிண்ட் பகுதியில் உருக்கி, அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து, அதற்கு தகுந்த பத்திரங்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வட்டியை கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு உபயோகிப்பது என மாநில இந்து சமய அறநிலைய துறை முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும். ஆண்டுதோறும் அதிகரிக்கும் காணிக்கைகளை வங்கிகளில் டெபாசிட்...