உத்தர பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள வாராணசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டிச் செல்கிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியது. மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் படித்துறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும் நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், வாராணசி மக்களவைத் தொகுதி...
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது, நீர்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சத்யேந்தர் ஜெயின். அப்போது, டெல்லி குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான டெண்டர் யூரோடெக் என்விரான்மென்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் முறைகேடு நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியது. குறிப்பாக, பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் கமிஷன் தொகைகள் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதற்கான...
பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை வீழ்த்திய குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானின் பாலகோட் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. மறுநாளே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, அன்றைய விங் கமாண்டர் அபினந்தன் தனது மிக்-21 பைசன்...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிர்வாக அதிகாரி லோகநாதத்தை, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக திருப்பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்திலும் ரகசியமாகத் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் இணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் லோகநாதம். இவர் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே...
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எப்சிஆர்ஏ) ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு முறை) சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்த சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டன.
கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர்...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளனர், மரணத்தை நேரில் பார்த்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். அந்த வகையில் மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அசாம்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சாடியுள்ளது.
லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்த இந்த கோயில், மதரஸா கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய...
சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
admin - 0
டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் பேரியம் குறைக்கப்பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோதனை முடிவுகளை மூன்று வாரங்களில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலை உரிமம், விற்பனை உரிமம் ரத்து...
கேரள மாநிலம், கொச்சியில் ஹுப்புல் ரசூல் மாநாட்டில், சன்னி பிரிவு மதகுருவும், இந்தியாவின் கிராண்ட் முஃப்தியுமான காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் பேசும்போது, “பெண்கள் தங்களது வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் பொது வெளிக்கு வரக்கூடாது” என்றார்.
இதுகுறித்து கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறியதாவது: பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற அபூபக்கரின் நிலைப்பாட்டை மாநில அரசு ஏற்கவில்லை. இஸ்லாம்கூட, பெண்களை வீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்று...
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா – பின்புலம் என்ன?
admin - 0
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக விமானப்படை முன்னாள் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடை மற்றும் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இதில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, அதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில்...










